டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாக இருந்தது - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

 
EPS EPS

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாக இருந்ததால் தான், இன்று இவ்வளவு பிரச்சினை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நாடாளுமன்றத்திலேயே திமுக எம்.பி.க்கள் தடுத்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில உரிமை பறிபோகும் சூழ்நிலையில் திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்காததால் தான் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரித்துள்ளது.

பிப்ரவரியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், 10 மாதமாக தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் - ஏன் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவில்லை. பிரதமரை முதல்வர் 2 முறை சந்தித்த போது, ஏன் டங்ஸ்டன் சுரங்கம் குறித்து பேசவில்லை. பேசி இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினையை சந்தித்திருக்க வேண்டியது இல்லை. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் திமுக அரசு அலட்சியமாக இருந்ததால் தான், இன்று இவ்வளவு பிரச்சினை என கூறினார்.