நம் நாட்டின் வருங்கால சிற்பிகளான குழந்தை செல்வங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் - ஈபிஎஸ் வாழ்த்து

 
ep

குழந்தைகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மறைந்த பிரதமர் ஜவர்ஹலால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டுக்கான குழந்தைகள் தின கருப்பொருள் அனைத்து குழந்தைகளும், அனைத்து உரிமைகளும் ஆகும். இந்த நிலையில்,  குழந்தைகள் தினத்தையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒரு சொல் பேச்சிலே உள்ளம் மகிழ வைத்து, கள்ளமில்லா சிரிப்பினிலே நெஞ்சம் நெகிழ வைத்து வருங்கால இந்தியாவை வலிமை மிக்கதாக உருவாக்க  காத்திருக்கும் நம் நாட்டின் வருங்கால சிற்பிகளான குழந்தை செல்வங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எனது அன்பார்ந்த இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.