திருவண்ணாமலை விபத்து - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

 
eps

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தனூர் நெடுஞ்சாலையில் பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த காரில் சுமார் 8 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில், எதிரே அதிவேகமாக வந்த வந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பெண் ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சை பலைன்றி உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த செங்கம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



  
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை  வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.