நடிகர் அஜித்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

 
ajith ajith

கார் ரேஸில் வெற்றி பெற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3R என்ற பிரிவில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி (901) மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் துபாய் 24H கார் ரேஸிங் போட்டியில் 992 போர்ஷே பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் அணி. ஒட்டுமொத்த ரேஸில் நடிகர் அஜித் குமார் ரேஸிங் அணி 23-வது இடத்தை பிடித்துள்ளது. தனது அணி வெற்றி பெற்றதும் தேசிய கொடியுடன் மகிழ்ச்சியை கொண்டாடினார் நடிகர் அஜித் குமார். இந்தியாவைச் சேர்ந்த ஒரு அணி சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை பிடிப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதுவும்  அஜித் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே இவ்வளவு பெரிய சாதனையை அந்த அணி செய்துள்ளது.

இந்த நிலையில், கார் ரேஸில் வெற்றி பெற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் நடைபெற்ற 24HSeries கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்கள் தலைமையிலான AjithkumarRacing அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.