பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேட்டி

 
eps

பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வேண்டுமென்றே தவறான தகவலை நிதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு அடியோடு சிரழிந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. எது கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா தாராளமாக புழக்கத்தில் இருக்கிறது.  ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏழை எளிய மக்களுக்காகதான் அவர் கொடுத்திருக்கிறார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையிலே அட்சய திட்டத்துக்கு நிதியை ஆளுநர் கொடுத்துள்ளார் என கூறினார். 

இதனிடையே அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: பாஜக கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. பாஜகவுடனான அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதை தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.