ஜெயலலிதா மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

 
EPS

1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மதுரையில் வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 65 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

EPS

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 1989ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறியது உண்மை தான்.  சம்பவம் நடந்தபோது நானும் பேரவையில் இருந்ததால் அந்த முறையில் இதைக் கூறுகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் என்றும் பாராமல் ஜெயலலிதா மீது அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தாக்குதல் நடந்தது. ஆனால், முதலமைச்சர் தவறான, பொய்யான தகவலை கூறி வருவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு கூறினார்.