கூட்டணியை முடிவு செய்வது தேசிய தலைவர்கள் தான்...அண்ணாமலை அல்ல - எடப்பாடி பழனிசாமி பதிலடி

 
EPS

கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள், மாநில தலைவர்கள் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக-பாஜக கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே தொகுதிகள் குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது. 2024,2026 ஆண்டு தேர்தல் குறித்து 2 மணி நேரம் அமித்ஷாவிடம் பேசினேன். 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். இப்போதைய நிலையில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டியது பாஜகவின் தேசிய தலைமை தான் என அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- கூட்டணி பற்றி பாஜக தேசிய தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள், மாநிலத்தில் உள்ளவர்கள் இல்லை. கூட்டணி தொடர்பாக மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் தான் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக பாஜக தேசிய தலைவர்களே சொல்லிவிட்டனர். அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதே விருப்பம். இவ்வாறு கூறினார்.