அமித் ஷாவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

 
eps eps

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கூட்டணிக்காக சந்திக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: இருமொழிக் கொள்கையை தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதியிலிருந்து உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்தினேன். இந்த சந்திப்பானது மக்களுக்கான சந்திப்பு. கூட்டணி குறித்து அமித் ஷாவிடம் எதுவும் பேசவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. இப்போது கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறினார்.