சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

 
eps

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது.  2023-24 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  அதேசமயம் சமாதானம் என்னும் புதிய திட்டத்திற்கான சட்டம் உன் வடிவை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி இன்று தாக்கல் செய்தார். 

இதனிடையே சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க  தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. சுமார் 20 - 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகள் சிறையில் உள்ளனர்.  வயது மூப்பு, உடல்நலக்குறைவு மற்றும் குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரீசிலனை செய்து விடுதலை செய்ய முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறினார்.