தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு

 
eps

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். 

சேலம் மாநகர அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி,  தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். 

EPS

தொடர்ந்து பேசிய அவர், மிக்சி, கிரைண்டர், ஃபேன் என அதிமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டன.  அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 7.5% இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவராகியுள்ளனர். தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை, அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் வரும்போது கவர்ச்சிகரமான அறிவிப்புகளை திமுகவினர் வெளியிடுவார்கள். மக்களை பேசி மயக்கி, ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் திமுக ஆட்சி. இவ்வாறு கூறினார்.