"உயிருள்ளவரை தேசத்திற்காகவே என் பணி" என வாழ்ந்தவர் வ.உ.சிதம்பரனார் - ஈபிஎஸ் புகழாரம்
செக்கிழுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் புகழை போற்றி வணங்குகிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலரும் வ.உ.சிதம்பரனாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆங்கிலேய ஆதிக்கத்தை தன் எழுத்தாலும் பேச்சாலும் கலங்கடித்து, நாட்டின்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 18, 2024
முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, "உயிருள்ளவரை தேசத்திற்காகவே என் பணி" என வாழ்ந்த செக்கிழுத்தச் செம்மல் ஐயா. வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளான இன்று, #கப்பலோட்டியதமிழர் அவர்களின் திருவுருவப்படத்தை
தமிழ்நாடு… pic.twitter.com/BP6Ep3Zz4j
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆங்கிலேய ஆதிக்கத்தை தன் எழுத்தாலும் பேச்சாலும் கலங்கடித்து, நாட்டின் முதல் சுதேசி கப்பல்களை இயக்கி, "உயிருள்ளவரை தேசத்திற்காகவே என் பணி" என வாழ்ந்த செக்கிழுத்தச் செம்மல் ஐயா. வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளான இன்று,
கப்பலோட்டிய தமிழர் அவர்களின் திருவுருவப்படத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் திறந்துவைத்த பெருமையோடு, அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.