பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா? - எடப்பாடி பழனிசாமி பதில்

 
eps

புதுக்கோட்டை அரசுப் பள்ளியில் படித்து 7.5% உள் ஒதுக்கீடு மூலம் மருத்துவம் படிக்கச் செல்லும் 5 மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்கி பாராட்டினார் 

EPS

தொடர்ந்து புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக- பாஜக கூட்டணி ஏற்கனவே நான் பேசி முடிந்த கதை. இனி கூட்டணி இல்லை என பலமுறை தெளிவுப்படுத்திவிட்டோம். மீண்டும் மீண்டும் அதையே பேசி அரைத்த மாவையே அரைக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அதிமுக சந்திப்பதற்கு தயாராக உள்ளது. எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும். நான் முதலமைச்சராக இருந்த போது நடந்த அனைத்து பொதுக்கூட்டத்திற்கும், போராட்டத்திற்கும் அனுமதி கொடுத்தேன்” என்றார்.