எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம்!
எழும்பூர் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு இரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் எழும்பூர் மெட்ரோஇரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
— Chennai Metro Rail (@cmrlofficial) February 2, 2024
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ இரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு இரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் எழும்பூர் மெட்ரோஇரயில் நிலையத்தில் உள்ள வாகன…
இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் வருகின்ற 05.02.2024 (திங்கட்கிழமை) முதல் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.