மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு! சென்னையில் சோகம்
சென்னையில் மாடு முட்டி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மாடு முட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரை ஏற்க மறுத்த காவல்துறை மாடுகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்
இந்நிலையில் முதியவர் ஒருவரை மாடு முட்டி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை விரட்டி விரட்டி பிடித்தனர். மாடுகளை பிடித்ததால் மாட்டின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு 10,000 அபராதம் விதக்கப்பட்ட பொழுதும், மாடுகளை அவர்கள் சாலையிலே விட்டு விடுவதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வாரத்திற்கு இரண்டு நாட்கள் மாடுகளை பிடிக்கும் நிலையில் உரிமையாளர்கள் தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.


