விறுவிறுப்பாக நடைபெறும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்..!

 
 Chinna Thirai Nadigar Sangam  Chinna Thirai Nadigar Sangam


சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.  

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.  விருகம்பாக்கத்தில் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்கள ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  தினேஷ், பரத், சிவன் சீனிவாசன் ஆகுய 3 பேர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட, சுடேட்சையாக தலைவர் பதவிக்கு ஆர்த்தி கணேஷ்கர் போட்டியிடுகிறார்.,  

Image

முன்னதாக சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதி தொடங்கியது. முன்னதாக சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக சிவன் சீனிவாசனும்,  போஸ் வெங்கட் செயலாளராகவும் இருந்து வருகின்றனர்.  இவர்களின் பதவிக்காலல் முடிவுக்கு வருவதையொட்டி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளை தவிர, 2 துணை தலைவர்கள், 4 இணைச்செயலாளர்கள் 14 கமிட்டி உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 3 அணிகளாக மொத்தம் 69 பேர் தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.