#BREAKING குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி கட்டாயம் - தமிழ்நாடு அரசு
குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையிலும் மாசை குறைக்கும் வகையிலும் மின்சார வாகனங்களில் பயன்பாட்டை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்புகள், வணிகம் தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவன வளாகங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
750 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமான பரப்பு மற்றும் எட்டு வீடுகளுக்கு அதிகமாக உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒவ்வொரு பார்க்கிங் இடத்திலும் சார்ஜிங் வசதி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 50 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள குடியிருப்புகளில் பார்வையாளர்களுக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 சதுர மீட்டர் எப்எஸ்ஐக்கு அதிகமாக உள்ள வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள், கல்வி நிறுவன கட்டிடங்களில் உள்ள மொத்த வாகன நிறுத்த பரப்பில் 10% பரப்பில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


