மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்!
Sep 12, 2025, 11:10 IST1757655605265
385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும்..
இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.


