எலான் மஸ்கின் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்..!

 
1 1

தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இவர்களுக்குப் பிறந்த மகன்களில் ஒருவருக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகரின் நினைவாக 'சேகர்' என்று பெயரிட்டுள்ளதாகவும் மஸ்க் கூறியுள்ளார். ஷிவான் சிலிஸ், தான் கைக்குழந்தையாக இருக்கும்போதே தத்துக்கொடுக்கப்பட்டதாகவும், அவர் கனடாவில் வளர்ந்ததாகவும் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார். ஷிவானின் தந்தை பல்கலைக்கழகத்தில் படிக்க வந்த வெளிநாட்டு மாணவராக இருக்கலாம் என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார், எனினும் அவருக்கு அதுபற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

எலான் மஸ்க் மற்றும் ஷிவான் சிலிஸ் தம்பதிக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதி, தனது மகனுக்கு உலகப் புகழ்பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் பெயரைச் சூட்டியதன் மூலம், உலகப் புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிக்கு எலான் மஸ்க் கௌரவம் அளித்துள்ளார்.