"பாலி நரிமன் அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது" - சசிகலா இரங்கல்

 
sasikala

பாலி நரிமன் அவர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் பணியில் திறம்பட செயலாற்றியவர் என்று சசிகலா புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், பிரபல சட்ட நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான பாலி நரிமன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராக திகழ்ந்த பாலி நரிமன் அவர்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது.

tn

பாலி நரிமன் அவர்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர் பணியில் திறம்பட செயலாற்றியவர். பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகவும் சிறப்புடன் பணிகளை ஆற்றியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களை தனது மகளாக கருதி மிகவும் பாசத்தோடு பழகியவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் பாலி நரிமன் அவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்தார். பாலி நரிமன் அவர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமையடைகிறேன்.


மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பயணித்த நீதித் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.