"25,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!!

 
stalin stalin

 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 25,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக  முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

12ம் வகுப்புக்கு பிறகு இடைநிற்றலை குறைக்கும் விதமாகவும்,  தொழில் மற்றும் அரசு பணிகளில் வாய்ப்புகளுக்கான போட்டியில் ஒரு சிலர் பின் தங்குவதை தவிர்க்கும்  வகையிலும் நான் முதல்வன் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.  இதன் மூலமாக பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் தங்களுடைய விருப்பப்படி உயர் கல்வியை தேர்ந்தெடுக்கவும்,   விண்ணப்ப படிவங்களை நிரப்பவும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்க அரசு உதவி வருகிறது.

stalin

 அதேபோல டிஎன்பிஎஸ்சி மற்றும் யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.  இதுவரை 252 கல்லூரிகள் வேலைவாய்ப்பு இயக்கங்களில் பங்கேற்றுள்ளன.  தமிழ்நாடு முழுவதும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த 25000 மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.   இன்னும் 58,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் தற்போது இறுதி ஆண்டு  படித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்த மனதைக் கவரும் செய்தியைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி! #நான்முதல்வன் திட்டத்தின் மூலம் 25,000க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை கிடைத்ததைக் கண்டு என் இதயம் பெருமிதத்தால் நிறைகிறது. நமது #திராவிட மாதிரி அரசு நமது இளைஞர்களின் கனவுகளை உண்மையாகவே நனவாக்கி வருகிறது. இந்த வாய்ப்புகளைத் தழுவி, உங்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களுக்குச் செல்லுங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.