கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருக..! ஓபிஎஸ் வலியுறுத்தல்.

 
Ops

கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில்மயமான மாநிலங்களின் வரிசையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டுமென்றால், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வதற்கான உகந்த சூழ்நிலை ஏற்படும்.

ஆனால் தமிழ்நாட்டில் ‘இனி தொழில் செய்யவே முடியாது’ என்ற நிலைக்கு வந்துள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கல் குவாரி அனுமதி பெற்றிருப்போர் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள், கடந்த மூன்று நாட்களாக ஏற்படுத்துவதற்கு முன்பு அரசு தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு காண வேண்டுமென்று கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர். சட்ட விரோத குவாரிகளை தடுக்க வேண்டுமென்றால், ஆன்லைன் மூலம் உரிமம் கொடுக்கும் முறையையும், ட்ரோன் மூலம் ஆய்வு மேற்கொள்ளும் முறையையும் தமிழ்நாடு அரசு விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும், கல் குவாரிகளையும், கல் உடைக்கும் ஆலைகளையும் இயக்குவதற்கு உரிய அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமென்றும் கல் குவாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 

கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருக..! ஓபிஎஸ் வலியுறுத்தல்.
மேலும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அம்மிக்கல், ஆட்டுக்கல், கிரைண்டருக்கான கல் ஆகியவை கைத்தொழில் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த அனுமதி தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டு விட்டதாகவும், இதுநாள் வரை இதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெற்று வந்ததாகவும், தற்போது இந்த அதிகாரம் சென்னையில் உள்ள கனிமவளத் துறை ஆணையருக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த அதிகாரத்தை மீண்டும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்க வேண்டுமென்றும் அப்பகுதியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல் குவாரி உரிமையாளர்கள், கல் உடைக்கும் உரிமையாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தின் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும், கட்டுமானத் துறை உள்ளிட்ட பல துறைகள் முடங்கும் ஆபத்தும் உருவாகியுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, கல் குவாரிகள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தத்தினை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்துப் பேசி அதற்கு ஒரு சுமூக தீர்வு காணவும், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் அம்மிக்கல், ஆட்டுக்கல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், சரளைக் கற்கள் போன்ற சிறு கனிமத்திற்குகூட கனிமத் திட்டம் (Mining Plan) அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளதாகவும், இதுபோன்ற நிபந்தனைகளுடன் தொழிலை தொடர முடியாது என்றும், பெரிய கனிமத்திற்குத்தான் இது பொருத்தமாக இருக்கும் என்றும், இதுபோன்ற நிபந்தனைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு விதித்ததாகவும், இது அண்டை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாடு அரசு தான் இதனை நடைமுறைப்படுத்துகிறது என்றும், குவாரிகளுக்கான அனுமதியை பொறுத்தவரை ஆந்திர பிரதேசம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் எளிமையான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும், தமிழ்நாட்டில் அனுமதி வழங்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாகவும்,

கல்குவாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருக..! ஓபிஎஸ் வலியுறுத்தல்.

ஒரு இடத்தில் பல குவாரிகள் இயங்குவதற்கான பரப்பளவு 25 எக்டேரிலிருந்து 5 எக்டேராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், குவாரி உரிமையாளர்களை சமூக விரோதிகள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் கல் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். பிற மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 2,000 லாரிகளில் கற்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது இதில் மிகப் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். கல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கல் உடைக்கும் ஆலைகளின் வேலை நிறுத்தம் தொடர்ந்தால், கட்டடத் தொழில் மிகப் பெரிய பாதிப்பினைச் சந்திக்கும் என்றும்,

இதன் காரணமாக கட்டுமானச் செலவு மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக ஏழையெளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கட்டுமானத் துறையினர் தெரிவிக்கின்றனர். இது தவிர, கட்டுமானத் துறையுடன் தொடர்புடைய குழாய் பதிக்கும் பணிகள், மின்சார சாதனம் பொருத்தும் பணிகள் என பல பணிகள் பாதிக்கப்படக்கூடும். இந்த வேலைநிறுத்தம் கட்டுமானத் துறையில் தாக்கத்தை போன்றவற்றை கைத்தொழிலாக மேற்கொள்வதற்கான அதிகாரத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மீண்டும் வழங்கவும் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று  குறிப்பிட்டுள்ளார்.