மது வாங்க வருபவர்களை அழைத்து அன்பான அறிவுரை - அமைச்சர் முத்துசாமி தகவல்

 
Muthusamy

அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை  என்று அமைச்சர் முத்துசாமி விமர்சித்துள்ளார்.

RAID TTN

 அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சரும்,  திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.  11 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு செம்மண் குவாரி தொடர்பாக சோதனை நடைபெறுகிறது.காலை 7 மணி முதல் அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர்.

muthusamy

இந்நிலையில் ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 21 வயதிற்கு கீழ் மது வாங்க வருபவர்களை அழைத்து அன்பான அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார்; அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது; அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்றார்.