விசிக து.பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

 
tn

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கரூரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூரை சேர்ந்த செல்வராஜ் அரசு ஒப்பந்ததாரர் என சொல்லப்படும் நிலையில், ஜவுளி நிறுவனமும் நடத்தி வருகிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 பேர் வருகை புரிந்த நிலையில்  காலை 7.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. 

RAID TTN

ரேஷன் பொருள் விநியோக முறைகேட்டில் செல்வராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. 

tn

தேனாம்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்.