பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் தொடக்கம்!

 
student student

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான  விண்ணப்ப பதிவு மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6 வரை நடைபெறும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் உயர்க்கல்விக்கு தயாராகி வருகின்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் இப்போதே உயர்க்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எந்த படிப்பை தேர்வு செய்வது, எந்த கல்லூரியில் படிப்பது என நீண்ட யோசனையில் உள்ளனர். 

இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான  விண்ணப்ப பதிவு மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6 வரை நடைபெறும் என பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.  மே முதல் வாரத்தில் பொறியியல் சேர்க்கை ஆன்லைன் பதிவு நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.