எண்ணும் எழுத்தும்' திட்ட மதிப்பீட்டு குழு - ஒரு முதுகலை ஆசிரியரை நியமிக்க உத்தரவு

 
govt

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதிகளை, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்பு திட்டங்கள், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

dpi

அந்த வகையில் 1 முதல் 3-ம்வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டம் வரும் கல்வியாண்டு (2023-24) முதல் 4, 5-ம் வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 5-ம் வகுப்புமாணவர்களின் கற்றல் நிலைகுறித்து அறிய தமிழ், ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வுத் தேர்வு செயலி மூலம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 முதல் 5-ம்வகுப்புகளுக்கான வகுப்பறை கால அட்டவணை, வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5-ம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் திட்டம்சார்ந்த வகுப்பறை செயல்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

tn

இந்நிலையில்  'எண்ணும் எழுத்தும்' திட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்ய 3 நபர் மதிப்பீட்டு குழுவில், ஒவ்வொரு குழுவிலும் ஒரு முதுகலை ஆசிரியரை நியமிக்க தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட அளவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பி.எட் கல்லூரி மாணவர்களை கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கற்றல் திறனை மதிப்பீடு செய்ய மூன்றாம் நபர் மதிப்பீடு நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டது.