இன்று அரியலூரிலும் பட்டாசு விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி - தினகரன் வேதனை!!

 
ttv dhinakaran

 பட்டாசு பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

tn

தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சுவடுகள் மறையும் முன்னதாகவே இன்று அரியலூரிலும் பட்டாசு விபத்து ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு தயாரிக்கும் இடங்கள், குடோன்கள் மற்றும் விற்பனைக்கடைகளில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததே விபத்து ஏற்படுவதற்கான காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பட்டாசு விபத்துகள் நடைபெற்று அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

tn

நிவாரணங்கள் மட்டுமே உயிரிழப்புகளுக்கு தீர்வாக அமையாது என்பதை இத்தருணத்தில் உணர்ந்து விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். " என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.