கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்- ஈபிஎஸ் அறிவுறுத்தல்

 
ep

கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

EPS

Image
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தென்காசி தொகுதி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதுவரை 26 நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தென்காசி & ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அனைவரையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் படி வலியுறுத்தியதோடு, கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் உத்தரவிட்டார். மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமார் 3,32,773 வாக்குகளை பெற்று 2ம் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.