அதிமுக IT பிரிவு நிர்வாகிகளுடன் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் - இபிஎஸ் அறிவிப்பு..!!

 
e e


அதிமுக IT பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

 இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  'புரட்சித் தமிழர்'  எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் மேலான ஆணைப்படி, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில்,

* 27.6.2025 - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள்; மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும்;

admk office

*28.6.2025 சனிக் கிழமை காலை 10 மணியளவில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர்; மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும்,

நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும்; வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. ஆகவே, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாட்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். க ழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.