தமிழக சுங்கச்சாவடி கட்டண உயர்விற்கு இபிஎஸ் கண்டனம்..!

 
1

தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ.100 முதல் ரூ.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது 
கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதில் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்த்தப்படவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், "மக்களின் போக்குவரத்திற்கு பெரும் சுமையாகவும், விலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கழகக் கூட்டணி வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மக்களவையில் குரல் கொடுப்பார்கள் என்ற உறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கிறேன்.” என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.