அதிமுக பிரசாரக் கூட்டத்தில் உயிரிழந்தவருக்கு ஈபிஎஸ் நேரில் அஞ்சலி- ரூ.20 லட்சம் நிவாரணம்

 
ச் ச்

கோபிசெட்டிபாளையம் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த அதிமுக தொண்டரின் உடலுக்கு  நேரில் அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார்.

Image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நேற்று மாலை அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அழைத்து வரப்பட்டனர் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். அவர் வருவதற்கு  முன்பாக அங்கு திரண்டிருந்த தொண்டர்களில் கொண்டையம் பாளையத்தை சேர்ந்த 43 வயதான அர்ச்சுனன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜுனன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் நேற்றிரவு பிரச்சாரக் கூட்டம் முடிந்த பின் முன்னாள் அமைச்சர்கள் கருப்பணன் ஏ.கே செல்வராஜ் உள்ளிட்டோர் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அர்ஜுனன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கு முன்பாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி உயிரிழந்த அர்ச்சுனன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் பின்னர் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அவர் அதிமுக சார்பில் நிவாரணத் தொகை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு அதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தலைமை கழகத்தின் சார்பில் மேலும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். தவெக, செங்கோட்டையன் உள்ளிட்ட மற்ற கேள்விகளுக்கு இந்த இடத்தில் வேண்டாம் என்று பதில் அளிக்க அவர் தவிர்த்து விட்டார்.