திமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் வெற்று அறிவிப்பு - ஈபிஎஸ் விமர்சனம்!

 
eps eps

திமுக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்? 

நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ,  கல்வி கடன் ரத்து குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்துவதாக தெரிவித்தார்கள் இடம் பெறவில்லை. நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவதாக தெரிவித்திருந்தனர், இடம்பெறவில்லை.சமையல் எரிவாயு மானியம் வழங்குவதாக தெரிவித்தனர், இடம்பெறவில்லை என கூறினார்.