பாஜக , ஆர்.எஸ்.எஸ்-ன் தலையாட்டி பொம்மையாக உள்ளார் இபிஎஸ் - செல்வப்பெருந்தகை..!!
பாஜக ஆர்.எஸ்.எஸ் யின் தலையாட்டும் பொம்மையாகவும் எழுதிக் கொடுப்பதை வாசிக்கும் வாசிப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளையொட்டி சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ராஜுவ் காந்தி இல்லை என்றால் கிராமங்களில் ஜனநாயகம் இருந்திருக்காது. இந்தியாவை தலைநிமிர வைத்தவர் ராஜிவ் காந்தி. உலக நாடுகளிடையே நம் பெருமையை உயர்த்தி காட்டியவர். அவரின் பிறந்தநாளில் பாசிசத்தை ஒழிப்போம். மதவாத சக்தியை ஒழிப்போம் அதே போல தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்ப்போம் என்று உறுதி ஏற்போம் என்று கூறினார்..
இந்தியா கூட்டணியில் ஒரு தெலுங்கரை அறிவித்து இருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு அந்த மண்ணோடு நிற்கப்போகிறாரா? பாசிசத்துடன் நிற்க போகிறாரா? என்று பார்க்க தான் வேண்டும். அவர் ஆந்திரா, தெலுங்கானா மக்களிடம் இருந்து அந்நியப்பட போகிறாரா? அவர்களுடன் இருப்பாரா என்பதை பார்ப்போம்.” என்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழர் என்ற முறையில் நீங்கள் ஆதரிப்போர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாசிசத்தை ஆதரிக்க மாட்டேன்; இஸ்லாமியரும் இந்தியர்கள், கிறிஸ்தவர்களும் இந்தியர்கள், பௌத்தர்களும் இந்தியர்கள் என்று எல்லோரும் இந்தியர் என்று சொல்பவர் தான் உண்மையான நேர்மையான இந்தியாவின் முகமாக இருக்க முடியும். நான் ஆர்.எஸ்.எஸ் என்று பெருமை சொல்பவர் இந்தியராக இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அமித்ஷா இன்று நிறைவேற்ற உள்ள மசோதா குறித்த கேள்விக்கு, “அவர்கள் என்ன வேண்டுமாலும் செய்வார்கள். ஒரு வேலை அவர்கள் பெரும்பான்மையை பெற்று இருந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து இருப்பார்கள்”என்று கூறினார்.
மேலும், “ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கும் சேவை. பிரதமரோ முதலமைச்சரும் யார் வந்தாலும் மனிதாபிமானம், மரபு. உயிருக்கு போராடக்கூடியவர்களை எடுத்துச்செல்லும் போது வழி விடவேண்டும். அதுவே தெரியவில்லை என்றால் நான்காண்டு காலம் எப்படி முதலமைச்சராக இருந்தார். மீண்டும் முதலமைச்சராக வருவேன் என்று சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது. மனிதபிமான அற்ற முறையில் பேசுவது ஒரு தலைவருக்கு தகுதியா?
ஈபிஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக இல்லை. பாஜக ஆர்.எஸ்.எஸ்-ன் தலையாட்டும் பொம்மையாக உள்ளார். அவர்கள் எழுதிக் கொடுப்பதை படிக்கும் ரீடராக இருக்கிறார். அவர்கள் சொல்வதை வாசிக்கும் வாசிப்பாளராக மாறிவிட்டார்” என்று தெரிவித்தார்.


