பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது ஜெயந்தி விழாவும் 62வது குருபூஜை விழாவும் அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.


