தியேட்டரில் அதிமுகவினருடன் 'இதயக்கனி' படத்தை பார்த்த இபிஎஸ்..!
Feb 18, 2026, 06:10 IST1771375204000
சென்னையில், 'ஆல்பர்ட்' தியேட்டரில், எம்.ஜி.ஆர்., நடித்த இதயக்கனி படம், ரீ ரிலீஸ் ஆனது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளோடு, இபிஎஸ் கண்டு ரசித்தார்.
இது குறித்து, அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டாலும், 'பிளாக்பஸ்டர் ஹிட்' அடிக்கிறது. சினிமாவில் அரசியலை புகுத்தி, வெற்றி பெற்றவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். சினிமாவில் நிஜமாகவே, உச்சத்தில் இருந்தபோது, அரசியலுக்கு வந்தவர்.
தனது படங்களில் புகைப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்தார். ஆனால், தற்போது சிலர், சினிமாவில் நடித்துவிட்டு, தன்னை எம்.ஜி.ஆராக நினைக்கின்றனர். அதையே கனவாகவும் காண்கின்றனர். அக்கனவு ஒருபோதும் பலிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

