நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி கைது!

 
dog dog

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியில் நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஒரு தோட்டம் அமைத்து அதனை கவனித்து வருகிறார். இந்த நிலையில், அந்த தோட்டத்தில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிந்து அவருக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியம் அந்த நாயை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நாயின் முதுகில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து நாயின் உரிமையாளர் ராதிகாவுக்கு தெரியவந்த நிலையில், ராதிகா நாயை துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணியனிடம் வந்து நியாயம் கேட்டுள்ளார். அப்போது சுப்பிரமணியம் நாயின் உரிமையாளர் ராதிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதிகா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.