இன்றும் நாளையும் இ-சேவை, ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படாது..!
Dec 31, 2025, 05:10 IST1767138002000
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் இரண்டு நாட்கள் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மற்றும் ஆதார் சேர்க்கை மையங்களில் மென்பொருள் பராமரிப்பு மற்றும் தணிக்கை பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 31.12.2025 மற்றும் 01.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் மேற்படி மையங்கள் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி, மையங்கள் 02.01.2026 முதல் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


