" மாலை நேர வகுப்புகள் கட்டாயம்" - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 
School Education

அனைத்து உயர்நிலை,  மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

school

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 12-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன.  கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் கடும் வெயிலின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.  தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்திருந்தார். குறுகிய காலத்தில் பாடங்களை முடிக்கும் கட்டாயம் இருப்பதால் வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

school

இந்நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  அனைத்து உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.