"இலக்கு 200 என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்"- மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியைப் பெற்றுச் சில மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராக இங்குக் கூடியிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், நம்முடைய அந்த வெற்றியும் நூற்றுக்கு நூறு வெற்றியாக இருக்க வேண்டும். நம்முடைய இலக்கு 200 தொகுதிகள். அதற்கான உழைப்பை, நீங்கள் இன்றிலிருந்தே தொடங்கியாக வேண்டும்!” என்றார்.
காத்திருக்கும் #Election2026 களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன்.
— M.K.Stalin (@mkstalin) October 28, 2024
'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்! நமது #DravidianModel சாதனைகளை… pic.twitter.com/5Psp9pL9wN
இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “காத்திருக்கும் 2026 தேர்தல் களத்தில் வெற்றியை ஈட்டித்தர உழைப்பைச் செலுத்தவுள்ள சட்டமன்றத் தொகுதிப் பார்வையாளர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினேன். 'இலக்கு 200' என்ற பாதையில் ஒவ்வொரு உடன்பிறப்பும் தொய்வின்றி உழைக்க வேண்டும்! நமது திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று வெற்றியைப் பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.