'எல்லோருக்கும் எல்லாம்' – பொதுக்கூட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

 
tn

 தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் 'எல்லோருக்கும் எல்லாம்' திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 161 இடங்களில் நடைபெறவுள்ளன.

'எல்லோருக்கும் எல்லாம்' – பொதுக்கூட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் தமிழ்நாடு அரசின் 2024–2025–ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய அரசின் மூலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வரும் வேதனைகளையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் பிப்ரவரி 26–ஆம் தேதி முதல் பாகம் வாரியாக வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களை விநியோகித்துத் திண்ணைப் பிரச்சாரத்தை நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணிகளைச் சார்ந்தோர் என அனைவரும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

tn

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டங்கள் , ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ திண்ணைப் பிரசாரம் வெற்றியைத் தொடர்ந்து ‘எல்லோருக்கும் எல்லாம்’ பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

மார்ச் 1-ஆம் தேதியன்று நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் கழகத் தலைவர் அவர்கள் 71-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார்.

பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாகத் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்தப்படுகின்றன.

tn

தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வருகிற மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் மாநகரம் மற்றும் நகரங்களில் 'எல்லோருக்கும் எல்லாம்' திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் 161 இடங்களில் நடைபெறவுள்ளன.

அப்பொதுக்கூட்டங்களில் "சிறப்புரையாற்றுவோர் கூட்டம்" 29.02.2024 காலை 11.00 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற்றும் கழக முன்னணியினர் தொண்ணூறு பேர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைப்புச் செயலாளர் - ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான இக்கூட்டத்தில், கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., அவர்கள், விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், மாநிலத் திட்டக்குழுத் துணைத் தலைவரும் பொருளாதார அறிஞருமான டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் வரவேற்புரையாற்றினார்.