முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார் ப.சிதம்பரம்

 
tn

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

tn

இந்தியாவில்  15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.  தமிழகத்தில் ப. சிதம்பரம் உள்ளிட்ட 6 எம்பிக்களின் பதவி காலம் நிறைவடைகிறது.  திமுக கூட்டணிக்கு 4 இடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸுக்கு  ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
 




இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார் . அப்போது அவருடன் அவரது மகனும் , சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உடனிருந்தார்.முன்னதாக எங்களுக்கு ஆதரவு தருகின்ற தி மு கழகம், அதன் தலைவர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு என் இதயம் நிறைந்த நன்றி! என்று ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.