டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்ததில் தவறு செய்துவிட்டீர்களா?? : திருத்திக்கொள்ள அரிய வாய்ப்பு..

 
tnpsc

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கு இதுவரை விண்ணப்பித்ததில் தவறுகள் இருந்தால்  அவற்றை வருகிற 14ம் தேதி முதல் 23 ம் தேதி வரை திருத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான  ஊழியர்கள் மற்றும்  அலுவலர்கள்தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  போட்டி தேர்வுகள் , நேர்காணல் தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானனவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.  அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 5,6,7,8  என  தேர்வுகள் உள்ளன.

TNPSC

 அந்தவகையில் இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு  நடைபெற உள்ளது.   நடப்பாண்டுக்கான  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு   பிப்ரவரி23-ம் தேதி தொடங்கியது.  மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கக  கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இதுவரை இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு,   சில தகவல்களை தவறாக பதிவு செய்துவிட்டதாகவும் அவற்றைத் திருத்திக் கொள்ள அனுமதி வேண்டும் என்றும் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்து வந்தனர்.

tnpsc

இந்த காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவிட்டால் பலர் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்,  இதன் மூலம் வெற்றியை தவறவிடும் தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக வருகிற 14-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஒருமுறை பதிவு ( ஓடிஆர்)  மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 இது தொடர்பான முழு விவரங்களை www.tnpscexams.in என்கிற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும்,  மேலும் 1800 41 90 958 என்ற கட்டணமில்லா தொலைபேசி க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45  மணிவரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.