தூத்துக்குடியில் பரபரப்பு..! தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி அஜிதாவின் தற்போதைய நிலை என்ன..?

 
1 1

தவெக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா கடந்த டிசம்பர் 23ம் தேதி, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், எஞ்சிய மாவட்டங்களுக்கான செயலாளர்களை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தமக்கு கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருந்தார்.ஆனால், அந்த பதவிக்கு சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் விஜய்யை நேரில் சந்தித்து முறையிட முயன்றார். ஆனால், பாதுகாப்பு பணியாளர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. 

இந்த சம்பவத்திற்கு பிறகு தூத்துக்குடி திரும்பிய அஜிதா, கடந்த மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்த அவர், இன்று காலை திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரது கணவர் கூறுகையில், "இன்று காலை எழுந்தபோது, சிலர் தன்னை திமுகவின் கைக்கூலி என்று விமர்சிப்பதாக கூறி அஜிதா மிகவும் வருத்தப்பட்டார். அந்த வேதனையில் வீட்டில் இருந்த சுமார் 10 தூக்க மாத்திரைகளை எடுத்து விழுங்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கனவே மன உளைச்சல் காரணமாக இரத்த அழுத்தம் குறைந்த நிலையில், தற்போது தூக்க மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளதால் அவரது உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.