#BREAKING வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான அவகாசம் நீட்டிப்பு

 
ச் ச்

எஸ்ஐஆர் படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை டிச.11ம் தேதி வரை சமர்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதியுடன் அவகாசம் முடியும் இலையில், டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீக்கப்பட்டுள்ளது. SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நடைபெற்றுவருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் படிவங்களை பதிவேற்றம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தற்பொழுது எஸ்ஐஆர் நடைமுறை மேற்கொள்ளப்படும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது