அதி கனமழை எச்சரிக்கை- ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டும்: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

 
அதி கனமழை எச்சரிக்கை-ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டும்: கோவை ஆட்சியர் எச்சரிக்கை அதி கனமழை எச்சரிக்கை-ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டும்: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

அதி கனமழை எச்சரிக்கை உள்ளதால் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டும் என கோவை ஆட்சியர் பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை மாவட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் பவன்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பவன்குமார், “கோவையில் கனமழை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, 2 நாட்கள் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். மரம் வெட்டும் கருவிகள், ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. வால்பாறை, டாப்சிலிப் பகுதியில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, மாநகராட்சியிலும் மண்டல வாரியாக உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.


வால்பாறை, டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஜெனரேட்டர்கள், 100 JCBகள், 50 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. வாய்க்கால்கள் தூர் வாரும் பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பவானி ஆற்றங்கரைக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும். அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளோம். வால்பாறையில் உள்ள அரசுக் கல்லூரியில் தற்காலிக மீட்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். மழை பாதிப்புகள் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்” என்றார்.