அதிகரிக்கும் கொரோனா! முகக்கவசம் கட்டாயம் இல்லை - மத்திய அரசு

 
mask mask

தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 

.நாடு முழுவதும் மீண்டும் கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அதற்கான முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது. கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளால் நோய் பரவல் அபாயம் இருந்தால் ரத்து செய்ய வேண்டும்: பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்து, அங்கு சுகாதாரம் பேணிக்காக்கப்படுகிறதா? கழிவறை முறையாக உள்ளதா? உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.