விஜயகாந்த்தின் நினைவிடத்தில் சடங்குகள் செய்யும் குடும்பத்தினர்!

 
tn

கேப்டன் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அவரது  குடும்பத்தினர் சடங்குகள் செய்தனர்.

vijayakanth
தேமுதிக நிறுவனத்தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் வைக்கப்பட்டு பின்னர் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில்  வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் மதியம் 2.30 மணிவரை அஞ்சலி செலுத்தினர்.  இதையடுத்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன்  72 குண்டுகள் முழங்க கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

tn

இந்நிலையில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். அதேபோல் கேப்டன் விஜயகாந்த்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் மல்க சடங்குகளை செய்தனர்.