வீட்டுக்குள் புகுந்து விஜய்யை கட்டிப்பிடித்த ரசிகர்! 2 நாட்களாக மாடியில் தங்கியிருந்ததால் பரபரப்பு
Y பிரிவு பாதுகாப்புள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டுக்குள் ரசிகர் சென்றது எப்படி? என்ற விசாரணையில் வெளியான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினமே நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர், ஒரு நாள் முழுவதும் மாடியின் மீது இருந்துள்ளார். நேற்று மாலை மாடி மீது வாக்கிங் செல்வதற்கு சென்ற விஜய் இளைஞர் ஒருவர் இருப்பதை கவனித்துள்ளார். விஜயைப் பார்த்ததும் அந்த இளைஞர் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரிடம் பேசி விஜய் தரை தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் ஒப்படைப்புள்ளார்.
அப்போது அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால் விஜய் அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நேற்று முன்தினம் விஜய் வீட்டின் பின் பக்கம் இருக்கும் சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விஜய் பார்ப்பதற்காக அன்று பகல் இரவு முழுவதும் நேற்று பகல் முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கி இருந்துள்ளார் . Y -பிரிவு பாதுகாப்பு கொண்ட விஜயின் வீட்டில் 24 மணி நேரமும் சிசிடிவி மூலமும் கண்காணிக்கப்படுகிறது.


