ரசிகர்கள் ஷாக்..! விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா சீரியலில் நடித்த, பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரை தொடர்ந்து,  கடந்த 15 வருடங்களாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் குணசித்ர வேடத்தில் நடித்த பிரபலமானவர் பிரபாகரன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.


62 வயதாகும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பனிவிழும் மலர்வனம்' தொடரில் நடித்திருந்தார்.   தற்போது ஜீ தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' தொடரிலும் நடித்து வருகிறார். சூட்டிங் முடிந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன், இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்ற நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும்போதே இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அவரை அழைத்து சென்ற நிலையில், இவரை சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இவர் இறந்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

இவருடைய  மரணம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.