பிறந்தநாளையொட்டி வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள்.. செல்ஃபி வீடியோ எடுத்து மகிழ்ந்த சூர்யா..!!
தனது பிறந்தநாளை ஒட்டி, வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து, நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நடிகர் சூர்யா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ,சூர்யா நடுத்து வரும் ‘கருப்பு’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்தியுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா 46, லோகேஷ் கனகராஜின் ரோலெக்ஸ், விக்ரம் 2 மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சூர்யாவைக் காண அவரது ரசிகர்கள் சூர்யாவின் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களைப் பார்த்து கையசைத்து, நன்றி தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன் ரசிகர்களுடன் இருப்பது போன்ற செல்ஃபி வீடியோவைவையும் வெளியிட்டுள்ளார்.
#WATCH | பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுடன் SELFIE வீடியோ எடுத்துக்கொண்ட சூர்யா#SunNews | #HBDSuriyaSivakumar | #HappyBirthdaySuriya | @Suriya_offl pic.twitter.com/d4wJgEbl2t
— Sun News (@sunnewstamil) July 23, 2025