தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது!

 
toll

நாடு முழுவதும் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம்.

Toll booth

இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் நள்ளிரவு  12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் நாடு முழுவதும் நள்ளிரவு  12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. 

Toll-booth

இந்நிலையில் மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் 75 முதல் 720 வரையிலும், மாதாந்திர பாஸ் கட்டணம் 100 முதல் 400 வரையிலும் உயர்ந்துள்ளது.  கடந்த ஏப்ரல் 1ம் தேதி கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.